Friday, February 1, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மற்றுமொரு குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்!

Friday, February 01, 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மற்றுமொரு குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து இந்தக் குழுவினர் ஆராய்வார்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.இதன்படி, பத்து விசேட பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எவ்வாறெனினும், விசேட பிரதிநிதிகளின் விஜயம் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை முதலில் இலங்கைக்கு விஜயம் செய்து, யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலைமைகளை பார்வையிட வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.பிரதிநிதிகளை அனுப்பி நிலைமைகளை பார்வையிடுவதனை விடவும் நேரடியாக நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நவனீதம்பிள்ளையின் விஜயத்திற்கான ஆரம்ப பணிகளை மேற்கொளவதற்காக ஏற்கனவே இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும், தொடர்ந்தும் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நவனீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment