Thursday, February 7, 2013

ஜெயலலிதா பிறந்த நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, February 07, 2013
திருவள்ளூர்::திருவள்ளூரில் வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் ரமணா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். எம்எல்ஏ மணிமாறன் வரவேற்றார். டெல்லி சிறப்பு பிரதிநிதி பி.எம்.நரசிம்மன், செவ்வை சம்பத்குமார், எம்.எல்.ஏ பொன்.ராஜா, முன்னாள் எம்எல்ஏ அரி, ரவிச்சந்திரன், பரிமேலழகர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

திருவள்ளுர் வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் அனைத்து பகுதிகளிலும் பிப்ரவரி 24ல் பிறந்தநாள் காணும் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். மாணவர்களுக்கு எழுதுப் பொருள்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புட்லூர் சந்திரசேகரன், அம்மு மாதவன், திருநாவுக்கரசு, தட்சிணாமூர்த்தி, இ.என். கண்டிகை ரவி, குணாளன், டி.டி.சீனி வாசன், சூரகாபுரம் சுதாகர், கந்தசாமி, சவுந்தர்ராஜன், மற்றும் முத்து கொண்டாபுரம் ரமேஷ், ஏழுமலை, பெருவை சேகர், வாசு, வக்கீல் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment