Thursday, February 07, 2013
இலங்கை::எதிர்வரும் 22 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை இலங்கை அரசாங்கம் கவனமாக ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கையின் வரைபை, தொழில்நுட்ப உதவி கருதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தநிலையில் நவநீதம்பிள்ளையின் அறிக்கை, எதிர்வரும் வாரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கையில் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றத்தின் பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை முன்னேற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment