Thursday, February 7, 2013

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற 57 பேர் கடற்படையினரால் கைது!

Thursday, February 07, 2013
இலங்கை::சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற சிலர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாசிக்குடா கடற்பரப்பில் வைத்து 57 பேர் இன்று காலை மடக்கிப்பிடிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

பிடிக்கப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்குடாவின் கிழக்கில் 10 கடல் மைல் தொலைவில் இவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment