Thursday, February 7, 2013

இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை வருகை : திருமலையில் பலத்த பாதுகாப்பு!

Thursday, February 07, 2013
இலங்கை::திருப்பதி::இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையையொட்டி திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சே, ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாளை திருமலைக்கு வருகிறார். நாளை இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்குகிறார். மறுநாள் காலை சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்கிறார். ராஜபக்சே வருகைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது வருகையை கண்டித்து பல்வேறு கட்சியினரும் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

எனவே, ராஜபக்சே வருகையின்போது அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காக திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை போலீசார் நேற்று பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். ராஜபக்சே தங்கும் விடுதியில் இருந்து கோயில் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment