Monday, February 11, 2013
ஜெனீவா::ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் நம் நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகளையும், பிரசாரங்களையும் முறியடிக்குபடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெனீவா மற்றும் அதன் சுற்றுப்புறச் சூழலில் வாழும் இலங்கையர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 65 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாரு தெரிவித்தார்.
இவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இது நாட்டிற்கு சவாலான காலமாகும் என்று குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளில் வாழும் சிலர் தங்களது சுயலாபகங்களுக்காக இலங்கையின் வளர்ச்சியை தடுக்கும் முகமாக பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.
இலங்கையர்களான நமக்குள் எத்தகைய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் நலன் கருதி அனைவரும் ஒன்றுப்பட்டு இந்த சதிமுயற்சிகளை முறியடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment