Tuesday, February 5, 2013

சென்னையிலும் இலங்கையின் சுதந்திர தின வைபவம்!

Tuesday, February 05, 2013
சென்னை::இலங்கையின் 65வது சுதந்திர தினம் தமிழ்நாடு சென்னை மாநகரிலுள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயத்தில் பதில் பிரதி உயர் ஸ்தானிகர் ஓ. எல். அமீர் அஜ்வாட் தலைமையில் வெகு விமர்சையாக நேற்றுக் கொண்டாடப்பட்டது.

சென்னையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான உதவி உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் முதன் முறையாக இக்கொண்டாட்டம் இடம்பெற்றது.

பதில் பிரதி உயர் ஸ்தானிகர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதுடன் ஆரம்பமான இவ்வைபவத்தின் போது 65வது சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கையின் பிரபல பாடகர் சூரியகுமார் முத்தழகு தமிழ், சிங்கள மொழிகளில் பாடல்களைப் பாடினார். இலங்கையின் கலை நடனங்களும் இடம்பெற்றன.

இவ்வைபவத்தில் சென்னையில் வாழும் இலங்கையர்கள், வர்த்தக பிரமுகர்கள், நலன் விரும்பிகள் உட்பட முக்கியஸ்தர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment