Sunday, February 3, 2013

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது

Sunday, February 03, 2013
இலங்கை::மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா வீசாவை பெற்று இலங்கைக்கு வருகைத்தந்து சாரதியாக தொழில் புரிந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சந்தேகநபரான இந்திய பிரஜை இன்று களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்....

போதைப் பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது!

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 80 கிராம் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவரது கணவர் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியாக இருந்து போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment