Sunday, February 03, 2013
இலங்கை::65வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாளை முற்பகல் திருகோணமலையில் இம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
“அழகான தாய்நாடு, வளமான நாளை தினம்” என்ற தொனிப்பொருளில் இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.
இதனிடையே, இந்த நிகழ்வுகள் குறித்தான ஏற்பாடுகள் குறித்து விபரங்களை தருகிறார் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய
நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ள 65வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இரணுவத்தின் சுமார் 2 ஆயிரம் பேர் ஊர்வலத்தில் பங்குகொள்ளவுள்ளனர்.
பீரங்கி படைப்பிரிவு உள்ளிட்ட மேலும் பல பிரிவினரும் நிகழ்வுகளில் பங்குகொள்வதற்கான சகல ஏற்பாடுகளுடன் உள்ளனர்.
திருகோணமலை கோட்டையில் இருந்து நாளை ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான கைதிகளுக்கு விடுதலை வழங்க புனருத்தானம் மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாளை ஆயிரத்து நூறு கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அமைச்சு தெரிவித்துள்ளது.
தண்டபணம் செலுத்த முடியாத நிலையில் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் அடங்கலாக சிறு குற்றங்கள் செய்த ஆயிரத்து நூறு கைதிகளே விடுவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன், சிறையடைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் நாளை கைதிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment