Wednesday, February 13, 2013
இலங்கை::coming soon images கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த இந்த மாணவர்களுக்கு வவுனியா - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு மாணவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நான்கு மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் சிலவற்றுடனும் LTTE ஆதரவு செயற்பாட்டுடனும் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்ததாக பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதால் அவர்களது நலனை கருத்திற்கொண்டு புனர்வாழ்வளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்கு செல்லாது புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்று பயிற்சிகளை பெற்றுக்கொள்ள மாணவர்கள் விருப்பம் தெரிவித்ததையடுத்தே அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment