Saturday, February 09, 2013
திருப்பதி::இலங்கை தமிழர் பகுதியில் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ராஜபக்சே கூறினார். இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது மனைவி ஷிராந்தி ஆகியோர் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு திருமலைக்கு வந்தனர். இரவு திருமலை விருந்தினர் மாளிகையில் தங்கினர். இன்று அதிகாலை 2.10 மணியளவில், ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் ராஜபக்சே, அவரது மனைவி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு, கோயில் வளாகத்தில் உள்ள ரங்க நாயகலு மண்டபத்தில் கோயில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு கோயிலில் இருந்து வெளியே வந்த ராஜபக்சே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்ய உரிமை உள்ளது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிகளை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு போராட்டங்கள் நடத்த வேண்டும். இலங்கை அரசு சார்பில் ஏராளமான வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு ராஜபக்சே கூறினார். பின்னர் கார் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டார்...
இலங்கை அதிபர் மகிந்தர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் வந்த அவர் புத்தகயாவில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் அதிகாலை 3 மணிக்கு ராஜபக்சேவும் அவரது குழுவினரும் திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். சுமார் ஒரு மணிநேரம் கோயிலில் தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த ராஜபக்சே செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன். ஏழுமலையானை தரிசனம் செய்தது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது. எனக்கு எல்லா நாட்டிலும் புலிகளின் ஆதரவாளர்களால் எதிர்ப்பு உள்ளது. இதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றார்.

No comments:
Post a Comment