Friday, February 15, 2013

காதலர் தினம் கொண்டாட்டம் : நாய்களுக்கு திருமணம் நடத்தி இந்து முன்னணியினர் எதிர்ப்பு!!

Friday, February 15, 2013
சென்னை::உலகெங்கிலும் காதலர் தினம்  களை கட்டியது. இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காதலர்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் காதல் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட சென்னை இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இன்று காலை கொருக்குப்பேட்டை கே.என்.எஸ் டெப்போ அருகில் ஆண் நாய்க்கும், பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்பேரில் ஆண் நாய், பெண் கழுதையை கொண்டு வந்தனர். கூட்டத்தை பார்த்ததும் பெண் கழுதை அங்கிருந்து தப்பியோடியது.

இதனால் மற்றொரு பெண் நாயை கொண்டு வந்து மாலை மாற்றி சென்னை மாநகர இந்து முன்னணி தலைவர் மனோகரன் திருமணத்தை நடத்தி வைத்தார். நிர்வாகிகள் செல்வக்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பேண்டு வாத்தியம் முழங்க இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் முருகேசன் தலைமையில் ஆண், பெண் நாய்க்கு மாலை மாற்றி திருமணம் நடத்தி வைத்தனர். மெரினா விவேகானந்தர் இல்லம் காமராஜர் சாலையில்  காலை இந்து மக்கள் கட்சியினர் 13 பேர் திரண்டனர். பின்னர், அவர்கள் திடீரென காதலர் தினவாழ்த்து அட்டைகளை எரிக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment