Friday, February 15, 2013
இலங்கை::எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிரணிக் கட்சிகளின் தலைவர்கள் குழு 15.02.2013 வெள்ளிக்கிழமை வட பகுதிக்கான விஜயத்தை மேற்கொள்கின்றது.
கடந்த சில தினங்களின் முன்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வியஜம் மேற்கொண்டிருந்த நிலையில் எதிரணிக்கட்சிகள் வடக்கிற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் ரணில் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கின்றனர்.
இன்று காலை 10.30 மணிக்கு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்துகொள்வதோடு பிரதேச பிரமுகர்கள் மற்றும் மக்கள் சந்திப்பில் பங்கேற்பர். பகல் 12.30 மணிக்கு தென்னிந்திய திருச்சபையினருடனான சந்திப்பு இடம்பெறும்.
பிற்பகல் 3 மணிக்கு நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்து நல்லை ஆதீனத்துடனான சந்திப்பில் பங்கேற்பர். பிற்பகல் 4 மணிக்கு ஆயர் இல்லத்துக்குச் சென்று யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளாருடனான சந்திப்பில் கலந்துகொள்வர்.

No comments:
Post a Comment