Wednesday, February 06, 2013
சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்து வரும் 8ம் தேதி காலை கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் திமுக மாணவர் அணி அழைப்பு!
சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் இள. புகழேந்தி வெளியிட்ட அறிக்கை: (புலி ஆதரவு) டெசோ அமைப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டை நீர்த்துப் போகச் செய்து தமிழர் அடையாளங்களை அழிப்பதில் தீவிரவாதியாகவும், தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட பயங்கரவாதியாகவும், இன்றும் ஈழத் தமிழர் வாழ்வாதாரங்களை சீர்குலைத்து வரும் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்து வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டையுடன் திமுக மாணவர் அணி நிர்வாகிகள், மாணவர் அணியினர் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


No comments:
Post a Comment