Wednesday, February 06, 2013
இலங்கை::இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட தமிழ் பெண் வீராங்கனைகளின் குடும்பத்தினருக்காக வீடுகள் அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டமொன்று கிளிநொச்சிப் பிரதேசத்தில் (ஜன.04) இடம் பெற்றது. இத்திட்டமானது இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களையொட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தினூடாக தமிழ் இராணுவப் பெண் வீரர்களின் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்தும் வகையில் 100 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இத் திட்டத்தின் முதற்கட்டத்திற்கான அடிக்கல் நட்டும் வைபவம் நேற்று இடம்பெற்றது. இதற்கமைய முதற்கட்டத்தினூடாக 20 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டவுள்ளது. இவ் 20 வீடுகளில் 8 வீடுகள் 57 ஆவது படைப்பிரிவுப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், (திருமுருகண்டி, பாரதிபுரம், விஷ்வமடு) ஏனைய ஒவ்வொரு 6 வீடுகளும் முறையே 65 ஆவது மற்றும் 66 ஆவது படைப்பிரிவுப் பிரதேசங்களில் (தேவம்பிட்டி, முல்லாவி, முல்லாவி வடக்கு,பொன்னகர், நாச்சிக்குடா, சிவநேஸ்வரி, ரன்ஜிபுரம், புடமுரிப்புமலை, பரந்தன், முக்கம்பிட்டி, கந்தபுரம், அக்கரயான்குளம்) முன்னெடுக்கப்படவுள்ளன.இவ் வீடுகளின் கட்டுமானப் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்மை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக அரசு நிதியளிக்கவுள்ளது. இதன் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபாய் 500,000 க்கும் மேல் செலவிடப்படவுள்ளதுடன் இதற்காக 10 மில்லியன் ரூபாவை வடமாக ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்ரசிரி அன்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரிய அதிகாரிகளிடம் கையளித்தார்.
மதத் தளைவர்கள், இராணுவ உயரதிகாரிகள், தமிழ் பெண் இராணுவ வீராங்கனைகளின் குடும்பத்தினரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்...
வீடொன்றுக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவு செய்து இராணுவத்தின் ஆளணி மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி இந்த 20 வீடுகளும் முற்றிலும் இலவசமாக நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 101 தமிழ் பெண்கள் அண்மையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப் பட்டனர். இவர்களில் 45 பேர் வீடுகள் அற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகவே 20 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய பெரேராவின் ஆலோசனைக்கமைய இராணுவத்தின் 57 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுராஜ் பன்ஷா ஜாயாவின் வழிகாட்டலில் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் ஆறு மாத காலப்பகுதிக்குள் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன






No comments:
Post a Comment