Wednesday, February 6, 2013

வீட்டுவேலைக்காக இலங்கை பெண்கள் சவுதி அரேபியா செல்ல தடை!

Wednesday, February 06, 2013
இலங்கை::இலங்கை பெண்கள், சவுதி அரேபியாவில், வீட்டு வேலை செய்ய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், இலங்கையை சேர்ந்த, ஐந்து லட்சம் பெண்கள், வீட்டு வேலை செய்கின்றனர். இவர்கள், அந்நாட்டு எஜமானர்களால், பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர்.

வீட்டு வேலை செய்யும் பெண்களின் உடலில் ஆணி அடிப்பது, சூடு வைப்பது போன்ற கொடுமைகள் நடந்துள்ளன. புட்டியில் பால் குடித்த குழந்தை, மூச்சு திணறி இறந்ததற்காக, இலங்கை சேர்ந்த இளம் பெண் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மாதம், தலை துண்டித்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவங்களால், வெறுத்து போன, இலங்கை அரசு, "இனி, சவுதியில், வீட்டு வேலை செய்ய,பெண்கள், செல்லக்கூடாது' என, தடை விதித்துள்ளது. ""வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு, சவுதி அரசு காப்பீடு அளிக்கும் பட்சத்தில், பெண்கள் சவுதி செல்ல அனுமதிக்கப்படுவர்,'' என, வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை தலைவர் அபோன்சோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment