Friday, February 8, 2013

தமிழக கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 இலங்கை மீனவர்கள் விடுதலை!

Friday, February 08, 2013
இலங்கை::தமிழக கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 21 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டை அடுத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட மீனவப் படகுகளும் இலங்கை மீகனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் திகதி 3ஆம் திகதி நில்வெல்ல மீனவ துறைமுகத்திலிருந்து "நிமாஷா 1" என்ற படகில் சென்ற ஆறு மீனவர்களும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி திருகோணமலை பகுதியிலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற "அனுஷா 1' என்ற படகில் பயணித்த ஐந்து மீனவர்களும் இதில் அடங்குகின்றனர்.

அதேவேளை தங்காலை மீனவ துறைமுகத்திலிருந்து அன்றைய தினம் கடலுக்கு சென்ற "அசேன் புத்தா 1" என்ற படகில் பயணித்த ஐந்து மீனவர்களும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி திருகோணமலை பகுதியலிருந்து "ஹங்ஷிகா" படகில் பயணித்த ஐந்து மீனவர்களும் இதில் அடங்குகின்றனர்.

இந்திய ஒன்றிணைந்த விசாரணை குழுவினரால் விடுவிக்கப்பட்டுள்ள 21 மீனவர்களும் மகாபோதி விஹாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment