Friday, February 08, 2013
சென்னை::சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான சென்னை - ஏக்மோர் பகுதியிலுள்ள இலங்கை வங்கியின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் பிரகாரம் 12 பேரைக் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக த ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை - ஏக்மோர் பகுதியிலுள்ள இலங்கை வங்கியின் அலுவலகம் மீது இனந்தெரியாதவர்கள் நேற்று பிற்பகல் 1.30 அளவில் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment