Tuesday, February 12, 2013
மும்பை::மும்பையில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய, பயங்கரவாதி யாசின் பாட்கல் மற்றும் அவனது கூட்டாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, ஏ.டி.எஸ்., என, அழைக்கப்படும், மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். அத்துடன், குற்றவாளிகளின் புகைப்படம், வயது, அங்க அடையாளங்கள் போன்ற விவரங்கள் அடங்கிய, சுவரொட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஏ.டி.எஸ்., தலைவர் ராகேஷ் மரியா கூறியதாவது:
27 பேர் பலி - 130 பேர் காயம் :
மும்பை, ஓபரா ஹவுஸ், ஜாவேரி பஜார் மற்றும் தாதர் மேற்கு ஆகிய பகுதிகளில், 2011, ஜூலை 13ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில், 27 பேர் பலியாயினர்; 130 பேர் படுகாயமடைந்தனர். அதே ஆண்டு, ஆகஸ்ட், 1ம் தேதி, புனேயில் உள்ள ஜாங்லி மகராஜ் சாலை, தேனா வங்கி கிளை, மெக்டோனால்டு உணவகம் மற்றும் கார்வார் பாலம் அருகே குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, யாசின் பாட்கல் மற்றும் அவனது கூட்டாளிகள் தாஹாசின் அக்தர் வாசிம் அக்தர் ஷைக், 23, அசதுல்லா அக்தர் ஜாவித் அக்தர், 26 மற்றும் வாகஸ் (எ) அகமது, 26, ஆகியோர் பற்றி தகவல் தருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு ராகேஷ் மரியா கூறினார்.

No comments:
Post a Comment