Tuesday, February 12, 2013
இலங்கை::பொது நலவாய அமைப் பின் உச்சிமாநாடு இலங் கையில் நடத்தப்படுமென் பதை அந்த அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா நேற்று ஊர்ஜிதம் செய்தார். அதேநேரம், நேற்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு லண்டனிலிருந்து இலங்கை வந்திருக்கும் கமலேஷ் சர்மா, நேற்று உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் செயலணி குழுத் தலைவர்களை சந்தித்து உரையாடிய தன் பின்னர் இதனை ஊர்ஜிதம் செய்ததுடன் மாநாட்டுடன் சம்பந்தப் பட்ட இடங்களையும் தீர்மானித்ததாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற் றுக்காலை இந்த சந்திப்பு நடைபெற் றது. பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தலைமை யில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் லண்டனிலிருந்து இலங்கை வந்திருக் கும் சிரேஷ்ட உறுப்பினர் ஐவரும், செயலணிக் குழுத் தலைவர்கள் 15 பேரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் 90 நிமிடங்கள் வரை நடை பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆரா யப்பட்டதாகவும் ரொட்னி பெரேரா கூறினார்.
மேலும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான இணையத்தளம் மற்றும் விசேட இலச்சினை ஆகியன தொடர்பிலும் கமலேஷ் சர்மா ஆலோசனைகளை முன்வைத்தார்.
உச்சி மாநாட்டுடன் ஒத்ததாக இளைஞர் பேரவை, மக்கள் பேரவை மற்றும் வியாபாரப் பேரவை ஆகிய வற்றை நடத்துவது தொடர்பிலும் நேற்றைய சந்திப்பின் போது கலந் துரையாடப்பட்டது. இதன்படி நெலும் பொக்குனவில் உச்சி மாநாட்டினை நடத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டதாகவும் அவ்வதிகாரி கூறினார்.
அதனைத் தவிர பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்ட பம், ஹம்பாந்தோட்டை, தம்புள்ள ஆகிய இடங்களில் வெவ்வேறு பேரவைகளை அங்குரார்ப்பணம் செய்வது தொடர்பிலும் கலந்தாலோசிக் கப்பட்டுள்ளது.
பண்டாராநாயக்க ஞாபகார்த்த சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கி வரும் செயலணி நேற்று முதல் தமது முழு நேர வேலைத்திட்டங்களை ஆரம் பித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கமலேஷ் சர்மா தலைமை யிலான குழு இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் சபா நாயகரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment