Friday, January 11, 2013
இலங்கை::அரசியலமைப்பு மற்றும் நீதித்துறைக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் Friday Forum கோரிக்கை விடுத்துள்ளது.
Friday Forum அமைப்பைச் சேர்ந்த கலாநிதி ஜயந்த தனபால, பேராசிரியர் சாவித்ரி குணசேகர மற்றும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோரின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நீதித்துறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படவில்லை எனவும் இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் Friday Forum குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக காணப்படுவதால் நீதிமன்றங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை அடையாளம் கண்டு அதன் பிரகாரம் செயற்படுமாறும் ஜனாதிபதிக்கு Friday Forum தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்ற தீர்மானங்களை இல்லாது செய்யும் பாராளுமன்றத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் செயற்பட வேண்டாம் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment