Friday, January 11, 2013
இலங்கை::அவிசாவளை நீதிமன்ற விளக்கமறியலிலிருந்து தப்பிச்சென்ற பத்து சந்தேகநபர்களில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் கொஸ்கம பகுதியில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கொஸ்கம மற்றும் ரனாகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றும் 25 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே கொஸ்கம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற மற்றுமொரு சந்தேகநபர் நேற்று மாலை புவக்பிட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவிசாவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து அழைத்துவரப்பட்டு, தற்காலிக நீதிமன்ற சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இந்த சந்தேகநபர்களிடம் கூரான ஆயுதங்கள் இருந்தமை தெரியவந்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே குறிப்பிட்டார்.
இதேவேளை, விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச்சென்றமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment