Friday, January 11, 2013

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பஸ் போக்குவரத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்!

Friday, January 11, 2013
ஜம்மு::ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது. அதன்பின்னர் நேற்று நடந்த சண்டையின்போது பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் எல்லையில் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.

எல்லைப் பிரச்சினை காரணமாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லும் 25 சரக்கு லாரிகள், கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. செக்போஸ்ட் கதவை திறக்காததால், 25 லாரிகளிலும் உள்ள உணவுப் பொருட்கள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வரும் பஸ் போக்குவரத்தை பாகிஸ்தான் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இதுபற்றி பூஞ்ச் வர்த்தக அதிகாரி அப்துல் ஹமீது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அதிகாரியுடன் தொடர்பு கொண்டு எல்லையில் உள்ள நிலவரம் பற்றி தெரிவித்தார். இரு தரப்பிலும் மோதல் நடந்துவரும் நிலையில், மறு உத்தரவு வரும்வரை எந்த பயணமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment