Friday, January 11, 2013

பொல்சானா மாநில தூதுக்குழுவினர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்!.

Friday, January 11, 2013
இலங்கை::இத்தாலியின் மிகப்பெரிய உல்லாசபுரியாக திகழும் பொல்சானா மாநிலத்தின் தலைவர் கலாநிதி லுயிஸ் டன்வெல்டர் தலைமையிலான விசேட தூதுக்குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

அலரி மாளிகையில் இடம் பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வதற்காகவே தாம் இலங்கைக்கு விஜயம் செய்ததாக இக்குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

ஹம்பந்தோட்டையில் உல்லாச பயணிகளின் ஹோட்டல் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் இது குறித்து மூன்று இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவித்தனர்.

சபாநாயகர் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள மேற்படி இத்தாலிய தூதுக்குழுவினர் மத்தளை விமான நிலையம், ஹம்பந்தோட்டை துறைமுகம், பாணந்துறை கைத்தொழில் பேட்டை ,திஸ்ஸமஹாராமை ஏற்றுமதி உற்பத்திக் கிராமம் உட்பட நாட்டின் பல இடங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவையும் சந்தித்து உரையாடிய இக்குழுவினர் ,சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இராப்போசன விருந்துபசாரத்திலும் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment