Friday, January 11, 2013
இலங்கை::களனி தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தினை அமைச்சர் மேர்வின் சில்வா ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
களனி தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியை மேர்வின் சில்வா இராஜினாமா செய்துள்ளார்
களனி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியை பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, இராஜினாமா செய்துள்ளார்.
களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் படுகொலைக்கும், மேர்வின் சில்வாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலிக அடிப்படையில் தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாகவும், இராஜினாமா கடிதத்தை ஜனாதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா களனி தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அனுப்பி வைத்த கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி, களனி தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிக்கு வேறும் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு உறுதியளித்துள்ளது.
இதனை ஜனாதிபதி ஏற்று கொண்டுள்ளதாகவும் அந்த பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment