Friday, January 11, 2013
இலங்கை::பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, வாக்களிப்பின் போது சிரேஷ்ட அமைச்சர்களான டியூ குணசேகர, திஸ்ஸ வித்தாரன, சந்ரசிறி கஜதீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க ஆகியோர் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதேவேளை, நேற்றும் இன்றும் குற்றவியல் பிரேரணை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment