Friday, January 11, 2013


Friday, January 11, 2013
டமாஸ்கஸ்::சிரியாவில் அதிபர் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. இதில் அதிபர் படையினர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். போராளிகளின் ஒவ்வொரு இடமாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில
் சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள டாப்டானாஸ் விமானப்படை விமான தளத்தை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் நடைபெற்ற சண்டையில் போராளிகள் கட்டுப்பாட்டிற்குள் அப்பகுதி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிருந்துதான் அதிபர் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சிரியா உள்நாட்டு போருக்கு 60000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment