Wednesday, January 9, 2013

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டின் ரொபிக்கன் இன்று காலை யாழ். ஆயரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்!

Wednesday, January 09, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டின் ரொபிக்கன் இன்று காலை யாழ். ஆயரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ். ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் யுத்தத்தின் பின்னர் மக்களின் நிலை குறித்தும் இதன்போது பிரான்ஸ் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.

மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். ஆயர் இதன்போது பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் எனவும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் கடல் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் யாழ். ஆயர் பிரான்ஸ் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றும் யாழ். ஆயர் பிரான்ஸ் நாட்டின் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment