Wednesday, January 09, 2013
இலங்கை::பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கும் என்று அக்கட்சியின் இணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கின்ற போதிலும் மேற்படி பிரேரணைக்கு எதிராகவே தமது கட்சி வாக்களிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இடம்பெற்ற கட்சிக்குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், மேற்படி விவாதத்துக்கு எதிராக நாளை முன்னெடுக்கப்படவுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்திலும் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றும் மாவை எம்.பி மேலும் கூறினார்.

No comments:
Post a Comment