Wednesday, January 09, 2013
புதுடெல்லி::பஞ்சாப் மாநில எல்லைக்குள் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுகமாக ஊடுருவினர். பின்னர் பணியிலிருந்த இரு இந்திய ராணுவத்தினர் 2 பேரை படுகொலை செய்தனர். பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனமான இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியதாவது:-
போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயல்களை கணக்கிடவேண்டும். இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுக்கும். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளவேண்டும்.
இனியும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க மாட்டோம். இதை ஒரு அத்துமீறலாக இந்தியா எடுத்துகொள்ளும். இந்தியா பொறுமை இழந்து வருகிறது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் பொறுமையை இனியும் சோதிக்கக்கூடாது.
நாங்கள் பொறுமையை இழந்து இருக்கிறோம். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறோம். இதுவே எங்கள் கடைசி எதிர்ப்பாக இருக்கவேண்டும்.
பாகிஸ்தானுடன் இந்தியா அதன் நட்புறவை விரிவுபடுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் சீர்குலைத்து வருகிறது. இது மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த உடன்படிக்கையை பல்வேறு காலகட்டங்களில் பாகிஸ்தான் மீறி வருகிறது.
சண்டை நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் மதிக்கவேண்டும். ஒரு நாட்டை பாதுகாக்கும் வீரர்களை அவமரியாதையாக நடத்துவது என்பது எந்த ஒரு நாகரீக சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆல்வி பேட்டி அளித்தபோது அந்த மேடையில், பாகிஸ்தானை கண்டிக்கும் வாசகங்கள் உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment