Wednesday, January 9, 2013

சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்!

Wednesday, January 09, 2013
இலங்கை::சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.

2005 ஆம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரிசானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு கோரிக்கைகளை முன்வைத்த போதும் இன்று காலை ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment