Wednesday, January 9, 2013

வருகிற 23-ந்தேதி விஜயகாந்த் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: மாவட்ட நீதிபதி உத்தரவு!

Wednesday, January 09, 2013
திண்டுக்கல்::கடந்த 1.8.2012-ம் தேதி திண்டுக்கல்லில் தே.மு.தி.க சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவையும் தரக்குறைவாக பேசியதாகவும், எனவே அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று திண்டுக்கல் அரசு வழக்கறிஞர் ஜெயபாலன் சார்பில் திண்டுக்கல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனிடையே விஜயகாந்த் மீது பல்வேறு மாவட்டங்களில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணையில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தற்போது விசாரணையில் உள்ளது.

எனவே திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய விஜயகாந்த் வரவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இவ்வழக்கில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் உள்ளதால் விஜயகாந்த் ஆஜராகவில்லை என்று தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார் மீண்டும் வருகிற 23-ந்தேதி நடிகர் விஜயகாந்த் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment