Wednesday, January 9, 2013

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ்ப்பாணத்தில்!

Wednesday, January 09, 2013
இலங்கை::இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரெபின்ஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது அவர் யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்திரநாயகத்தை சந்தித்து போருக்கு பின்னரான இலங்கை மற்றும் யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அவர் இன்று மாலை யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment