Wednesday, January 9, 2013

நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைகிறது - ஜி.எல்.பீரிஸ்!

Wednesday, January 09, 2013
இலங்கை::நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக,  குற்றம்சாட்டியுள்ளார்  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

இலங்கை அரசு மீது கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி நேற்று சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், "நந்திக்கடல் கரையோரத்தில் 2009 மே மாதம் தமது போரிடும் திறனை இழந்து போன  புலிகளுக்கு, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புதுவாழ்வு கொடுத்துள்ளது.


 இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், தனிஈழத் திட்டத்தின் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு பிராணவாயுவை வழங்கியுள்ளது. உறுதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய நல்லிணக்க முயற்சிகளைச் சீர்குலைக்கும் வகையிலேயே வெளியகத் தலையீடுகள் அமைந்துள்ளன.

இராணுவ பலம் இல்லாவிட்டாலும் அனைத்துலக அமைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க முடியும் என்று  புலிகளின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment