Wednesday, January 9, 2013

ராமேசுவரத்தில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்: மீட்புக்குழு தேடுகிறது!

Wednesday, January 09, 2013
ராமேசுவரம்:: மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரின் கதி என்ன? என்று தெரிய வில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற் பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் 650 விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று காலை இவர்கள் கரை திரும்பினர்.

ஆனால் கடலுக்கு சென்ற ராமேசுவரத்தைச் சேர்ந்த கற்புக்கரசி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மட்டும் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை. இதில் இருந்த மீனவர்கள் வேலுச்சாமி, முனியசாமி உள்பட 4 பேரின் நிலைமை என்ன என்று தெரிய வில்லை.

இன்று காலை வரை அவர்கள் கரை திரும்பாததால் மீட்புக்குழு மீனவர்கள், மாயமானவர்களை தேடி கடலுக்கு சென்றனர். மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடித்து சென்றதா? அல்லது கடல் சீற்றத்தால் திசைமாறி வேறு பகுதிக்கு சென்று விட்டனரா? என்று சந்தேகிக்கப்படுகிறது.

மீனவர்கள் வராததால் அவர்களது உறவினர்கள் கவலையுடன் உள்ளனர்.

No comments:

Post a Comment