Wednesday, January 9, 2013

தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே ம.தி.மு.க.வின் இலக்கு: (புலி)வைகோவின் 2013ம் ஆண்டின் ( ஜோக் )பேச்சு!

Wednesday, January 09, 2013
பூந்தமல்லி::ம.தி.மு.க. சார்பில் பூந்தமல்லி நீதிபதி செல்லப்பன் நாயக்கர் தெருவில் பாராட்டு விழா நடந்தது. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மத்திய பிரதேசம் மாநிலம் சாஞ்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு அளிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங் குட்டுவன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் (புலி)வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:-

நடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரலாம். முழுமையான பதவிக்காலம் முடிந்த பிறகும் தேர்தல் வரலாம். எங்களுக்கு எந்த ஒரு சுய நலமும் இல்லை. ஆனால் அதிகாரம் தேவைப்படுகிறது. ஆகவேதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் எங்களுக்கு ஒரு இலக்கு இருக்கும் என்று சொன்னால் அது தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதேயாகும். அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ள மகத்தான கூட்டம் தான் இது.

இதிலே உறுதி எடுத்து கொள்வோம். முன்னேறி செல்வோம். அதிகாரத்தை கைப்பற்றுவோம். அதை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் உறை கல்லாக இருக்கும். அதை பொதுக்குழுவில் அறிவிப்போம். டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரும் மது அருந்தி இருந்தார்கள். சம்பவத்திற்கான காரணத்தை விட்டு விட்டு நீங்கள் அறிவிக்கும் தண்டனை சட்டம் தடுத்து விடமுடியுமா? தண்டனை கொடுக்க வேண்டும். தூக்கில் போட வேண்டும். அவர்களின் ஆண்மையை அழிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் வந்த பிறகும் டெல்லியில் பல்லாயிரக்கனக்கானோர் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிறகும் இளம் பெண் நாசம் செய்யப்பட்டுள்ளார். கிளர்ச்சி செய்ய வந்த இடத்தில் இளம் பெண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூவை கண்ணன் தலைமையில் 100 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து ம.தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டத்தில் ம.தி.மு.க. பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பேராசிரியர் அப்துல்லா பெரியார் தாசன், மாவட்ட செயலாளர்கள் பாலவாக்கம் சோமு, வேளச் சேரி மணிமாறன், ஜீவன், மாவட்ட பொருளாளர் ஹட்கோ மணி, கவுரி குமார், நகர செயலாளர் சங்கர், துணை செயலாளர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment