Wednesday, January 09, 2013
இலங்கை::பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை நகரில் கடைகள் சில உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்யாத காரணத்தினால் அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக ஹட்டன் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.
முறைப்பாட்டாளர் நேற்று அதிகாலை முறைப்பாடு செய்யவந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த கான்ஸ்டபிள் அதனை பதிவுசெய்யவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசாரணையைத் தொடர்ந்து குறித்த கான்ஸ்டபிளை பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment