Wednesday, January 09, 2013
ஜம்மு::காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் ஊடுருவி, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் வெட்டி எடுத்து சென்றனர்.காஷ்மீர் மாநிலத்தில் அதிகளவில் பனிப்பொழிவு உள்ளது. இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ, பாகிஸ்தான் ராணுவம் உதவி வருகிறது. எல்லை பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள், ரோந்து வாகனங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவதின் மூலம் இந்த ஊடுருவல் செய்யப்படுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 12 முறைக்கு மேல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. காஷ்மீரில் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நேற்று காலை ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு கடும் பனிமூட்டம் இருந்தது.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் ‘எல்லை நடவடிக்கை படை’, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் அரை மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர், இந்திய வீரர்களின் பதிலடியை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தனது எல்லைக்குள் சென்றது.இந்த சண்டையில் இந்திய வீரர்கள் ஹேம்ராஜ், சுதாகர் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் திரும்பி செல்லும் முன்பாக, கொல்லப்பட்ட 2 இந்திய வீரர்களின் தலையை கொடூரமாக வெட்டி எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதல் மிகப்பெரிய அத்துமீறல் என்று குற்றம்சாட்டிய இந்திய ராணுவ அதிகாரிகள், இந்த பிரச்னையை பாகிஸ்தானுடன் நிர்வாக ரீதியாக கையாளப் போவதாக கூறினர்.
காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் ஊடுருவி, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் 2 இந்திய வீரர்கள் பலி: தலையை பாகிஸ்தான் ராணுவம் வீரர்கள் வெட்டி எடுத்து சென்றனர்!

No comments:
Post a Comment