Wednesday, January 09, 2013
இலங்கை::நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர்களது கூட்டம் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ தலைமையில் இன்று மதியம் இடம்பெறவுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை தொடர்பில் இதன் போது ஆராயப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஷந்திம வீரகொடி தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் மத்தியம் 12 மணிக்கு நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, இரா.சம்பந்தன் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரனை தொடர்பான விவாதம் நாளையும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையிலேயே, எதிர் கட்சி தலைவரர்கள் இன்றைய தினம் சபாநாயகருடன் கலந்துரையாடவுள்ளனர் என்பது குறிப்பிடித்தக்கது.

No comments:
Post a Comment