Wednesday, January 09, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளை நிறுவனங்கள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில கிளை நிறுவனங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இயங்கி வரும் சகல கிளை நிறுவனங்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
திட்டங்களுக்கு உரிய முறையில் நிதி உதவிகள் கிடைக்காத காரணத்தினால் கிளை நிறுவனங்களை மூடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நிலக்கண்ணி வெடி அகற்றல், இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளை நிறுவனங்கள் மூடப்படுவதனால் இடம்பெயர் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment