Thursday, January 10, 2013
இலங்கை::சட்டத்துறையை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிடம் நான் பணிவாக வேண்டுகிறேன் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்ற முதலாம் குழு அறையில் நடைபெற்றபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:
இன்று சட்டத்துறை அரசியல் மயமாக்கப்பட்டுவருகின்றமை இன்று நன்கு அவதானிக்க முடிகின்றது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்கு வரும்போது பிரதம நீதியரசர் ஒரு அரசியல்வாதி போலவே நடந்துகொண்டார்.
கௌரவமாக மதிக்கப்படவேண்டிய உயர் நீதி மன்ற வளாகம் தேங்காய் உடைக்கும் தளமாகவும் பிரித் நூல் கட்டும் இடமாகவும் மாற்றமடைந்தது. நீதி மன்ற சரித்திரத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இதற்கு முன்னர் ஒரு போதும் நடைபெறவில்லை.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சட்ட விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதம் இப்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் இருக்கின்றது. நாளைய தினம் இப்பிரச்சினைக்கு நல்லதொரு முடிவு நிச்சமாயக் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

No comments:
Post a Comment