Thursday, January 10, 2013

இந்தியாவுடனான வர்த்தக எல்லையை மூடியது பாகிஸ்தான்!

Thursday, January 10, 2013
புதுதில்லி::இந்தியாவில் இருந்து செல்லும் டிரக்குகளுக்காக, பாகிஸ்தான் வர்த்தக எல்லை இன்று திறக்கப்படவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு சில குறிப்பிட்ட போருட்கள் வணிக ரீதியாக பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது. இதற்காக டிரக்குகள் மூலம் பொருட்கள் எல்லைத் தாண்டிச் செல்லும். அந்த வகையில் இன்று இந்தியாவில் இருந்து சென்ற 15 டிரக்குகள், பாகிஸ்தான் வர்த்தக எல்லையை திறக்காத காரணத்தால் அந்நாட்டுக்குள் செல்ல இயலாமல் திரும்பி வந்தது. இது குறித்து கேட்டறிய, இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

No comments:

Post a Comment