Monday, January 7, 2013

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்ற பிரேரணை தொடர்பாக மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு நடைமுறைகளை சர்வதேச சமூகத்தினால் எந்த அடிப்படையிலும் விமர்சிக்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, January 07, 2013
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான குற்ற பிரேரணை தொடர்பாக மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு நடைமுறைகளை சர்வதேச சமூகத்தினால் எந்த அடிப்படையிலும் விமர்சிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் சட்டவாக்கம் ஆகிய துறைகளுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில்  பேராசிரியர் வண. பெல்லன்வில விமலரத்ன தேரர் மற்றும் கொழும்பு பேராயர் அதி வண. மல்கம் ரஞ்சித் உட்பட சர்வமத சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை முன்கொண்டு சென்றால் சர்வதேச விளைவுகள் தொடர்பில் சமய தலைவர்கள் விசாரித்துள்ளனர்.

அரசியலமைப்பிற்கு அமைவாகவே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன. இதனால் சர்வதேச சமூகம் பிரதம நீதியரசருக்கு தொடர்பான அறிக்கையில் குற்றம் காண முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த குற்ற பிரேரணை அரசியலமைப்பு நடைமுறைகளை அமைய இடம்பெறுகின்றதா? என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக மற்றுமொரு நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி சமய தலைவர்களிடம் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையில் சேவையாற்றிய நீதிச் சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் ஒருவர், முன்னாள் வங்கி அதிகாரி மற்றும் சிவில் சமூக தலைவர் ஆகியோர் கொண்ட குழுவொன்றே நயிமிக்கப்படவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

எனினும், அவர்களின் பெயர்களை ஜனாதிபதி வெளியிடவிலை. இந்த சந்திப்பில் சபை முதல்வாரன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment