Monday, January 7, 2013

டெல்லி மாணவி கற்பழிப்பு: 5 குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்!

Monday, January 07, 2013
புதுடெல்லி::டெல்லியில் கடந்த மாதம் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை கற்பழித்த ராம்சிங்,  முகேஷ்சிங்,  பவன்குப்தா, வினய்சர்மா, அக்ஷய்தாக்கூர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 6-வது குற்றவாளியான 17 வயது `மைனர்' வாலிபர் டெல்லியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ளான். 

அவன் `மைனர்' தானா என்பதற்கான சோதனை நடந்து வருகிறது. திகார் ஜெயிலில் உள்ள 5 குற்றவாளிகளில் ராம்சிங்,  முகேஷ்சிங், பவன்குப்தா, வினய்சர்மா ஆகிய 4 பேர்களின் காவல் முடிந்ததைத்   தொடர்ந்து நேற்று அவர்கள் 4 பேரும் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ஜோதி கிலர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 19-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அப்போது பவன்குப்தா, வினய்சர்மா இருவரும் அரசுக்கு ஆதரவாக அப்ரூவர்ஆக விருப்பம் தெரிவித்தனர்.  இது தொடர்பாக அவர்கள் இருவரும் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவரும் தண்டனையில் இருந்து தப்ப முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் சட்ட நிபுணர்கள் இதை மறுத்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்ரூவர்களாக மாறினாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று சரகத்தில் உள்ள விரைவு கோர்ட்டில் 5 குற்றவாளிகளும் அஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் குற்றப்பத்திரிகை  நகல் வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மீதான  வழக்கு விசாரணை தொடங்கியது. ஒரு மாதத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 17 வயது மைனர் வாலிபரிடம் சிறுவர் கோர்ட்டில் தனியாக விசாரணை நடைபெற உள்ளது.
1-11-12_findyour_INNER_468x60.gif

No comments:

Post a Comment