Sunday, January 06, 2013
இலங்கை::யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களும், புலிகளுக்கு ஆதரவான குழுக்களும் இருப்பதாகவும் இவர்களே மாணவர்களை வழி நடத்தி வருவது தெளிவாகியுள்ளதாக வடக்கில் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவுகள் கண்டறிந்துள்ளதாக சிரேஷ்ட இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் என்ற போர்வையில் வடக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஈழம் தொடர்பான நிலைப்பாடுகளை ஏற்படுத்தி, மீண்டும் ஆயுத கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள தயாராகி வருவது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகள் பற்றி தேடிபார்ப்பதை மாணவர் அடக்குமுறை எனவும் மனித உரிமை மீறல் எனவும் காட்டி, அதன் சாதகத்தை தமது ஈழம் தொடர்பான நிலைப்பாட்டிற்கு பயன்படுத்தி, வடக்கில் மீண்டும் ஈழம் பற்றிய நிலைப்பாட்டை கட்டியெழுப்புவதே இந்த சூழ்ச்சிகரமான வேலைத்திட்டத்தின் நோக்கம் எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment