Sunday, January 6, 2013

சென்னையில் இருந்து புறப்பட்டபோது ஆங்காங் விமானத்தில் திடீர் கோளாறு: 228 பயணிகள் தப்பினர்!

Sunday, January 06, 2013
சென்னை::சென்னையில் இருந்து ஆங்காங்குக்கு இன்று அதிகாலை 3 1/2 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 228 பயணிகளும் 7 ஊழியர்களும் ஏறி அமர்ந்தனர். விமானத்தை இயக்கும் முன்பு விமானி சோதனை செய்தார். அப்போது அதில் திடீரென்று தொழில் நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் விமானத்தை சரி செய்யும் பணி தொடங்கியது. ஆனால் முடியவில்லை. இதையடுத்து பயணிகள் 228 பேரும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் சரி செய்யப்பட்ட பிறகு இன்று இரவு 228 பயணிகளும் மீண்டும் ஆங்காங் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 228 பயணிகளும் தப்பினர்.

No comments:

Post a Comment