Sunday, January 06, 2013
இலங்கை::சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புலிகளுடன் இணைந்து செயற்பட்ட சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தற்போது பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
புலிகளுடனான யுத்தத்தின் போது பாரியளவு சர்வதேச சவால்களை எதிர்நோக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் சார்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட தரப்பினர் தற்போது பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்காக தேங்காய் உடைத்து பூஜைகளை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையில் செயற்பட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment