Sunday, January 6, 2013

ஜப்பானின் கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு யுத்த கப்பல்கள் நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளன!

Sunday, January 06, 2013
இலங்கை::ஜப்பானின் கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத் வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல்கள் இரண்டும் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை வந்தடைந்துள்ளதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

'சுசுனாமி' மற்றும் 'கிரிசேமி' ஆகிய இந்த இரண்டு கப்பல்களுமே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன இந்த இரண்டு கப்பல்களும் ஜப்பான் கடற்படையினரிடம் உள்ள அதி நவீன கப்பல்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

151 மீற்றர் நீளமான இரண்டு யுத்த கப்பல்களில் 'சுசுனாமி'என்ற கப்பல் 4650 தொன் நிறைகொண்டது. 'கிரிசேமி' 4550 தொன் நிறைகொண்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment