Tuesday, January 08, 2013
இலங்கை::வெள்ளத்தினால் மன்னார் - சிலாவத்துறை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புத்தல - கதிர்காமம் வீதியூடான போக்குவரத்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகெரகல நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
இதனால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
பராக்ரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக பொலனறுவை மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பலத்த மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment