Tuesday, January 8, 2013

திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது!

Tuesday, January 08, 2013
இலங்கை::திவிநெகும திணைக்களத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலம், குழு நிலை விவாதத்தின் போது விவாதிக்கப்பட்டு இன்று மாலை நிறைவேற்றப்படவுள்ளது.
திவிநெகும சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய 12 சீர்த்திருத்தத்தில் 10 சீர்த்திருத்தத்தை அரசாங்கம் ஏற்று கொண்டுள்ளது..
இந்தநிலையில், குழு நிலை விவாதத்தின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் திவிநெகும சட்டமூலம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்டின்  எமது செய்தி பிரிவிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
திவிநெகும சட்டமூல சீர்த்திருத்தம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில ஆலோசனைகளை வழங்கியிருந்தது..
அந்த ஆலோசனைகளுக்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையிலேயே சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தாhக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்டின்  குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஜே வீ பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment